1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (07:49 IST)

ஒரே மாதத்தில் ரூ.3 கோடி சம்பாதித்த விவசாயி.. கைகொடுத்த தக்காளி..!

கர்நாடக மாநில விவசாயி ஒருவர் ஒரே மாதத்தில் தனது நிலத்தில் பயிரிட்ட தக்காளியை விற்பனை செய்து மூன்று கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சந்திர மௌலி என்ற விவசாயி தனது நிலத்தில் விளைந்த விளைபொருட்களை விற்பனை செய்து பெரிய அளவில் லாபம் ஈட்டாமல் கடந்த பல ஆண்டுகளாக ஏழை விவசாயியாக இருந்தார். 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தக்காளி பயிரிட்ட நிலையில் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை அவர் விற்றதாகவும் 32 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட தக்காளியை அவர் விற்பனை செய்ததால் அவருக்கு ஒரே மாதத்தில் ரூபாய் 3 கோடி ரூபாய் லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. 
 
 தக்காளி விலை ஏற்றதால் தனது வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டதாகவும்  தனது மனைவி மற்றும் குழந்தைகளை இனி நல்ல முறையில் கவனித்துக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். லாட்டரி சீட்டு அடிப்பது போல் அவருக்கு ஒரே மாதத்தில் மூன்று கோடி ரூபாய் கிடைத்து இருந்தாலும், அவர் இதுவரை  உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பலனாகவே பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva