திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:09 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புத்தக விழாக்கள்! – நிரந்தர புத்தகவிழாவை தொடங்கிய அமைச்சர்!

கொரோனாவால் தமிழகத்தில் புத்தக திருவிழாக்கள் மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிரந்தர புத்தக விழாவை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மாவட்டம்தோறும் நடைபெறும் புத்தக விழாக்கள் எதுவும் நடைபெறாததால் புத்தக பதிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மிக முக்கியமான புத்தக விழாவான சென்னை புத்தக விழாவும் இந்த முறை நடைபெறவில்லை.

இந்நிலையில் அந்த குறையை சரி செய்யும் பொருட்டு சென்னை கன்னிமாரா நூலகத்தில் நிரந்தரமான புத்தக விழாவை தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். முன்னணி பதிப்பகங்கள் உள்ளிட்ட அனைத்து பதிப்பக புத்தகங்களையும் சலுகை விலையில் மக்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.