1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (15:02 IST)

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வாகனம்! – காவல் வாகனத்துக்கு அபராதம் விதித்த காவல்துறை!

மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்திற்கு காவல்துறையே அபராதம் விதித்துள்ளது.

மதுரை கீழ ஆவணி மூல வீதி சாலை ஒன்றில் வாகன போக்குவரத்திற்கு இடைஞ்சலாக காவல் துறை வாகனம் ஒன்று நின்றுள்ளது. அதை புகைப்படம் எடுத்த பொதுமக்கள் சிலர் அதை மதுரை காவல் நிலையத்திற்கு அனுப்பி புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த காவல் வாகனம் தேனி சமூக நீதி தீண்டாமை பிரிவு டிஐஜி உடையது என தெரிய வந்துள்ளது.

எனினும் பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனம் நிறுத்தப்பட்டதற்காக டிஎஸ்பி வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.