வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 26 பிப்ரவரி 2025 (16:01 IST)

உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர்.. அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்..!

KN Nehru
பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே  விலை போகாதவர் என்றும், அவரைத்தான் தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்றும் அமைச்சர் கே. என். நேரு விமர்சனம் செய்துள்ளார்.
 
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், இந்த விழாவில் பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே. என். நேரு, "பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர். அவர் தனது சொந்த மாநிலத்திலேயே டெபாசிட் கூட வாங்கவில்லை," என தெரிவித்தார்.
 
மேலும், "பிரசாந்த் கிஷோர் திமுகவுக்காக வேலை பார்த்தவர் என்பதால், அவரை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது தமிழக முதல்வருக்கு தெரியும். அவர் திமுகவை கண்டிப்பாக வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்," என்றும் இன்னொரு கேள்விக்கு அமைச்சர் கே. என். நேரு பதிலளித்தார்.
 
Edited by Mahendran