வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (14:05 IST)

விஜய்யை யாரும் பழி வாங்கவில்லை - அதிமுக!!

இது ஜனநாயக நாடு, இங்கு யாரையும் யாரும் பழிவாங்க முடியாது அமைச்சர் ஜெயகுமார் விளக்கம். 
 
பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலியில் நடந்துக்கொண்டிருந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விஜய்யிடம் சம்மன் வழங்கி அவரை அங்கிருந்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.
 
இன்று முதற்கொண்டு தொடர்ந்து இரண்டு நாட்களாக விஜய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் We Support Vijay என்ற ஹேஷ்டேகுகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இது விஜய் மீதான பழிவாங்கல் என விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இது ஜனநாயக நாடு, இங்கு யாரையும் யாரும் பழிவாங்க முடியாது. வருமான வரி சோதனை நடப்பதில் அரசுக்கு சம்மந்தம் இல்லை. அவர்கள் கடமையை செய்து வருகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக விளக்கம்  அளித்துள்ளார்.