ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (10:01 IST)

அமைச்சர் காந்தியின் மகன் கார் மீது தாக்குதல்: தலைமறைவாகிய ஊராட்சி மன்ற தலைவர்..!

தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் சென்ற கார் தாக்கப்பட்டதை அடுத்து இதில் இந்த சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற போது கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் தனது காரில் வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். அப்போது பாமகவினர் சிலர் அவரை வழிமறித்து உங்களை யார் உள்ளே வரவிட்டது என்று பேசியதாகவும் கூறப்படுகிறது
 
 இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் பாமகவினர் காந்தியின் மகன் காரை தாக்கியதாகவும் இதில் கார் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீஸ் காந்தியின் மகனை பத்திரமாக அனுப்பி வைத்தனர் 
 
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆறு பேரை போலீசார் கைது செய்து உள்ள நிலையில் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன் தலைமறைவாகியுள்ள நிலைஇயில் அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran