வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 29 ஜூலை 2017 (13:40 IST)

ஸ்டாலினுக்கு அதை பற்றி பேசவே தகுதியில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்!

ஸ்டாலினுக்கு அதை பற்றி பேசவே தகுதியில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்!

நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசுவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியே இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு மகளிர் கல்லூரியின் தற்காலிக கட்டிடத்தை திறந்து வைக்க வந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நீட் தேர்வு விவகாரகம் குறித்து பேசினார்.
 
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென திமுகவினர் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டி மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இந்த நீட் தேர்விற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு காரணமாக இருந்த ஸ்டாலினுக்கு இது பற்றி பேச தகுதி இல்லை என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.