திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (08:42 IST)

தமிழகத்தில் 2400 கைதிகள் விடுதலை – அமைச்சர் அதிரடி அறிவிப்பு !

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக சிறைகளில் உள்ள 2462 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 934 ஆக உள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் வேகமாகப் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் ஜாமீனில் வெளியாக இருக்கின்றனர். இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ''தமிழக சிறைகளில் இருந்து 2 ஆயிரத்து 462 விசாரணைக் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பரோலில் வெளியே சென்ற கைதிகளுக்கு பரோல் நீட்டிப்பு செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். புதிதாக பரோல் கேட்கும் கைதிகளின் குற்றத்தன்மையை ஆய்வு செய்து பரோல் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. புதிதாக சிறைக்கு வரும் கைதிகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.