செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 2 டிசம்பர் 2023 (21:07 IST)

ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ பயணம் - சென்னை மெட்ரோ அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் மெட்ரோ ரெயில்  இயங்கி வருகிறது. பல பகுதிகளுக்கு இந்த மெட்ரோ ரயில் இருப்பதால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அவ்வப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டு மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

சமீபத்தில், உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு மெட்ரோ ரயில்  டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டது. போட்டிக்கான டிக்கெட் பயன்படுத்திய இலவச பயணம் மேற்கொள்ளலாம்,  இரவு நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை நேரம் வழக்கத்தை விட கூடுதலாக நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில்  சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 3 ஆம் தேதி ( ஞாயிறு ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டத்தில்  பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

ஸ்டாட்டிக் கியூ ஆர், வாட்ஸ் ஆப், போன் பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.