வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:21 IST)

மெர்கன்டைல் வங்கியின் சி.இ.ஓ ராஜினாமா; ரூ.9 ஆயிரம் கோடி செலுத்தப்பட்ட விவாகரம் காரணமா?

tamilnadu mercantile bank
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வங்கி மற்றும் நிதிசேவை நிறுவனம் மெர்கன்டைல் நிறுவனம்.

இந்த வங்கியில் இருந்து சமீபத்தி ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் வங்கிக் கணிக்கிற்கு ரூ.9 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன்  தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று பேட்டியளித்த அவர், ஆட்டோ ஓட்டுனரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.9 ஆயிரம் செலுத்தப்பட்டதற்கும்   நான் தலைமைச் செயல் அதிகாரி பணியை ராஜினாமா செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.