உதயமாகிறதா தினகரன் அதிமுக? ஆட்சி கவிழும் ஆபத்து
ஒரு வழியாக அதிமுக அமைச்சர்களுக்கு ஞானோதயம் வந்து சசிகலா குடும்பம் இல்லாத அதிமுகவை உருவாக்க முடிவு செய்துவிட்டார்கள். அமைச்சர்களின் இந்த அதிரடி முடிவு உண்மையிலேயே தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆயினும் தினகரனுக்கு என்று ஒருசில விசுவாசுகள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை வைத்து புதிய அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவின் பரிந்துரையின் பேரில், அதிமுக அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏக்களாவும் இருக்கும் அஒருசிலர் ஆதரவாக இருப்பதால் தினகரன் அதிமுக அமைக்கவிருப்பது குறித்து விடிய விடிய ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது
அதிமுக அம்மா அணியில் தற்போது 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இதில் தினகரனுக்கு விசுவாசமானவர்கள் என ஐந்து எம்.எல்.ஏக்கள் பிரிந்து சென்றுவிட்டாலும் ஆட்சி கவிழும் ஆபத்து உள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்துவிட்டால் தினகரன் அதிமுக செல்லாக்காசாகிவிடும் என்பதால் மீதமிருக்கும் நான்கு ஆண்டு ஆட்சியை காப்பாற்ற வேண்டுமானால் எம்.எல்.ஏக்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது