ஆழ்கடலில் கண்டறியப்பட்ட கொரோனா மாஸ்க்குகள்! – கடல் உயிரினங்களுக்கு ஆபத்து!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் மாஸ்க் அணிவது நடைமுறையில் உள்ள நிலையில் வங்க கடலில் ஆழ்கடலில் முகக்கவசங்கள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக உள்ள நிலையில் ரூ.10 முதல் பல இடங்களில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறைவான விலையில் மாஸ்க் கிடைப்பதால் பலர் அவற்றை வாங்கி உபயோகித்து விட்டு வீசிவிடும் பழக்கமும் உள்ளது.
இவ்வாறு வீசப்படும் மாஸ்க்குகள் தற்போது குப்பையோடு குப்பையாக கடலில் கலந்து விடுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.