Daily Horoscope
✕

திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

Updated: புதன், 14 மார்ச் 2018 (14:43 IST)
பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கில் இருந்து தாயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 
2004-7ம் ஆண்டில், பி.எஸ்.என்.எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி  அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணை பல வருடங்களாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று அதன் தீர்ப்பு வெளியானது. எனவே, நீதிமன்றத்தில் கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரும் ஆஜராகியிருந்தனர்.
 
தீர்ப்பை வாசித்த நீதிபதி, இந்த வழக்கிலிருந்து தாயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி கூறினார். 
 
ஏற்கனவே 2ஜி வழக்கில் ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பி.எஸ்.என்.எல். வழக்கிலும் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டது திமுகவினருக்கு ஆனந்த அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

எல்லாம் காட்டு

2027 கோவிட் காலத்தை விட மோசமாக இருக்கும்.. உணவை சேமித்து கொள்ளுங்கள்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை....

அம்பேத்கர் பாடலுடன் திருமண ஊர்வலம்.. மணமகனை இரும்பு கம்பியால் தாக்கிய சாதி வெறியர்கள்...

2 தனி விமானங்களில் சென்னை வந்த தேசிய தலைவர்கள்.. கெத்து காட்டும் திமுக...

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும், எதிர்க்கும் கட்சிகள் எவை?...

ஸ்டாலினை மீட் பண்னி ஒரு யூசும் இல்ல!.. கார்கேவிடம் கனிமொழி பேசியது என்ன?....

அடுத்த கட்டுரையில்
Show comments