திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2023 (16:27 IST)

ஒரே நாடு ஒரே தேர்தலை நிறைய கட்சிகள் வரவேற்கிறார்கள் - அண்ணாமலை

ஒரே நாடு ஒரே தேர்தலை நிறைய கட்சிகள் வரவேற்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அதன்படி, வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்ட மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்  ஒரே நாடு ஒரே தேர்தலை நிறைய கட்சிகள் வரவேற்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் கூறியதாவது: '' சுய நலவாதிகள் அல்லது குடும்ப ஆட்சி செய்பவகள் அல்லது ஊழல் செய்பவர்கள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து வருகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது செலவினங்கள் குறைப்பது மட்டுமில்ல பத்திரிக்கையாளர்களின் சுமையைக் குறைப்பதற்குத்தான்'' என்று தெரிவித்துள்ளார்.

தேசிய  ஜன நாயகக் கூட்டணியில் இடம்பெற்ற அதிமுகவும்  ''ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக'' நேற்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள்  முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.