புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (16:53 IST)

பெண்ணை கற்பழித்த சித்தப்பா: இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

பெண்ணை கற்பழித்த சித்தப்பா: இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

நாமக்கல் மாவட்டத்தில் திருமணம் ஆன பெண்ணை அவரது சித்தப்பா முறை கொண்ட ஒருவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு தற்போது இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.


 
 
நாமக்கல் மாவட்டம் காட்சிநல்லூர் அருகே விநாயகபுரம் பகுதியை சேர்ந்த அவர் ரமேஷ். இவரது மனைவியை அவரது சித்தப்பா முறை கொண்ட கிருஷ்ணன் என்பவர் கடந்த 2010-ஆம் ஆண்டு பலாத்காரம் செய்தார்.
 
இதனையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். இந்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
 
இதனை விசாரித்த நீதிபதிகள் மகள் முறை கொண்ட திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்ததற்காக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.