அடப்பாவி…எதுவும் கிடைக்காலயா? சிசிடிவிய திருடிய நபர்!

வியாழன், 9 ஜூலை 2020 (18:20 IST)
தஞ்சாவூரில் திருடச் சென்ற இடத்தில் எந்த பொருளும் கிடைக்காததால் சிசிடிவி கேமராவைத் திருடிச் சென்றுள்ளார் ஒரு நபர்.

தஞ்சாவூர் பர்மா பஜாரில் கடை வைத்துள்ள அசார், நேற்று காலை தனது கடைக்கு வந்து பார்த்தபோது அவர் கடையின் முன் இருந்த இரு சிசிடிவி கேமராக்களில் ஒன்றைக் காணாமல் போகவே அதிர்ச்சியாகி தேட ஆரம்பித்துள்ளார். ஆனால் கடைக்குள் எந்த பொருளும் காணாமல் போகவில்லை.

இதையடுத்து அசார் மற்றொரு சிசிடிவி கேமராவை பரிசோதித்த போது தொப்பி அணிந்த ஒருவர் கடையின் கதவை உடைக்க முயன்று முடியாமல் போகவே, தன் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்குமோ என்று அதை எடுத்து செல்கிறார். இது சம்மந்தமாக அசார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை பணம் மோசடி.. ஆர்.எஸ்.எஸ். கூறிய அதிர்ச்சி கருத்து...

5.04 கோடி ரூபாய்மதிப்புள்ள ஆடம்பர காரில் சறுக்கு விளையாடி சேதப்படுத்திய சிறுவர்கள்... பெற்றோர் மீது வழக்கு...

இந்தியாவில் வெறும் 35 ரூபாய் மருந்து அமெரிக்காவில் ரூ.85,000.. அமெரிக்க பெண் சுட்டிக்காட்டிய மருத்துவ கொள்ளை...

சகோதரரை தாக்கிய வழக்கு!.. அமைச்சர் மரிய வில்சனுக்கு சிக்கல்!...

முன்னாள் அமைச்சர் ஏவ வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி.. இந்தியா திரும்புவாரா? விசாரணைக்கு ஒத்துழைப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments