மருந்துக் கடையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – காமக்கொடூரன் கைது!
மதுரையில் மெடிக்கலுக்கு மருந்து வாங்க வந்த இரு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நபர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யபப்ட்டுள்ளார்.
மதுரை செல்லூர் போஸ் தெருவில் மெடிக்கல் வைத்திருப்பவர் சங்கர். இவரது கடைக்கு நேற்று மாலை இரு பள்ளி சிறுமிகள் மருந்து வாங்க வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு மருந்து கொடுக்காமல் இழுத்தடித்து மற்றவர்களுக்கு மருந்துகளைக் கொடுத்து அனுப்பியுள்ளார் சங்கர்.
இதையடுத்து அனைவரும் சென்றுவிட்ட பிறகு சிறுமிகள் இருவரையும் உள்ளே அழைத்து தனது ஆடைகளைக் கழட்டி அவர்கள் முன்னர் நின்றுள்ளார். இதனால் சிறுமிகள் அலற அவர்களை ஊசியை வைத்துக் குத்திவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் இதைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது எனவும் அவர் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுமிகள் பயத்திலேயே இருக்க அவர்களின் பெற்றோர் விசாரித்து உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் போலீஸாரிடம் தகவல் சொல்ல அவர்கள் சங்கரை போக்ஸோ சட்டத்தின் கீழ கைது செய்துள்ளனர்.