வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (21:51 IST)

மம்தாவை பார்த்து திருந்துங்கள்: தமிழக அரசுக்கு தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இந்தியாவில் உள்ள மற்ற மாநில தியேட்டர் அதிபர்களுக்கு பெரும் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் மட்டும்தான் மத்திய அரசின் ஜிஎஸ்டி, மாநில அரசின் ஜிஎஸ்டி என இரட்டை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.



 
 
இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் ஒரு படி மேலே போய் மாநில அரசின் வரியை பெருமளவு குறைத்துள்ளார். இதனால் தியேட்டர் அதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
ரூ.100க்கு கீழே உள்ள தியேட்டர் கட்டணத்தில் மாநில அரசின் சார்பில் விதிக்கபப்ட்ட 9% வரியில் 7% தள்ளுபடி செய்யப்பட்டு வெறும் 2% மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் அதேபோல் ரூ.100க்கு மேல் உள்ள தியேட்டர் கட்டணத்தில் மாநில அரசின் 14% வரியில் 12% தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஆனால் இந்த தள்ளுபடி பெங்காலி மொழி படங்களுக்கு மட்டுமே என்றும் மற்ற மொழி படங்களுக்கு கிடையாது என்றும் அறிவித்துள்ளார்.
 
அதேபோல் தமிழ் மொழி படங்களுக்கு மட்டும் வரியை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.