வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (22:08 IST)

தமிழகத்தை ஆளப்போவது யார்?

தேசிய அளவில் மூன்றாவது கட்சியை துவங்கவும், பாஜகவின் ஆட்சியை முழுமையாக காலி செய்வதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெளிவாக செயல்ப்பட்டு வருகிறார். 
 
சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தார்.                                                                                                                                                                                                                                                                                                            மக்கள் பாரதிய ஜனதாவின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஆட்சி அதிகாரத்திலிருந்து அக்கட்சி வெளியேற்றப்படும் என தெரிவித்திருந்தார். 
 
மேலும், தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும் சக்தியாக உருவெடுக்கும். அதே போல ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார். எனவே அடுத்த முறை பாரதிய ஜனதாவால் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது என தெரிவித்தார்.