1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (08:02 IST)

வரும் 14ஆம் தேதி மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Rameswaram
வரும் 14ஆம் தேதி மகாளய அமாவாசை தினம் என்பதால் அன்றைய தினம் ராமேஸ்வரம் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மகாளய மகாளய அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வுகள் நடைபெறும். அன்றைய தினம் ஏராளமானோர் ராமேஸ்வரத்தில் குவிந்து வருவார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மகாளய அமாவாசை வரும் 14ஆம் தேதி வர இருக்கும் நிலையில் 13ஆம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதேபோல் மதுரை, கோவை, பெங்களூரு உள்பட முக்கிய இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும்  போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.  

அதேபோல் 14ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

Edited by Siva