அரசியலில் இருந்து ரெஸ்ட் எடுக்கும் மாஃபா பாண்டியராஜன்!

Last Updated: வெள்ளி, 30 ஜூலை 2021 (09:56 IST)

அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பணியாற்றிய மாஃபா பாண்டியராஜன் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இப்போது அவர் அரசியலில் இருந்து கொஞ்சம் விலகி தனது தொழில் நிறுவனமான மாஃபாவில் கவனம் செலுத்த உள்ளாராம்.

மாஃபா பாண்டியராஜன் முதலில் பாஜகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினர். பின்னர் தேமுதிக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :