1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (14:16 IST)

போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு: மதுரையில் பரபரப்பு

போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்து வருவது கடந்த சில வருடங்களாகவே அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களாக உள்ளது. சமீபத்தில் கூட சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இரு செல்போன் வியாபாரிகள் போலீஸ் விசாரணைக்கு சென்ற பின்னர் பிணமாக வீடு திரும்பினார் என்பது தெரிந்ததே.
 
சாத்தான்குளம் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மதுரையில் போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மதுரை அருகே பேரையூர் என்ற பகுதியில் இளைஞர் ஒருவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவரை போலீசார் அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என அவரது உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது