வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (12:38 IST)

மகரம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) -  பஞ்சம  ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர  ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய  ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன, சயன,  போக ஸ்தானத்தில்  குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:
இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். 
 
மாணவர்கள் சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.. 
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் எதிர்ப்புகள்  விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  முடிவு  எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
 
திருவோணம்:
இந்த மாதம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக பாதியில்  நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய  காரியத்தை நிறைவேற்ற  தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.
 
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.
 
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 6, 7, 8.