Daily Horoscope

மீண்டும் இயங்குகிறது மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

Written By siva
Updated: புதன், 25 ஆகஸ்ட் 2021 (07:25 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மதுரை - செங்கோட்டை ரயில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் மீண்டும் இயங்க இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
மதுரையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படுவதால் தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ரயில் இயங்கும் நேரம் மற்றும் நிற்கும் ரயில் நிலையங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம், மதுரை செங்கோட்டை இடையே ஆகஸ்ட் 30 முதல் இயங்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மதுரையிலிருந்து 7:10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 7.10 மணிக்கு வந்தடையும். 
 
இந்த ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
 

எல்லாம் காட்டு

வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு?!.. வெளியான அப்டேட்!...

2027 ஜனவரி எய்ம்ஸ் மருத்துவமனை ஓப்பன்!.. மத்திய அரசு தகவல்!...

யூபிஐ கட்டணத்தால் மக்களுக்கும் வணிகர்களுக்கும் வந்த குழப்பம்.. மீண்டும் ரூபாய் நோட்டு பரிவர்த்தனையா?

கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபு உடல்நிலை.. மருத்துவமனையின் லேட்டஸ்ட் அறிக்கை...

சிறிய முதலீட்டில் டெலிகிராம் மூலம் ஆரம்பித்த ஸ்டார்ட் அப்.. இன்று 10 லட்ச ரூபாய் வருமானம்..

அடுத்த கட்டுரையில்
Show comments