புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மார்ச் 2021 (10:46 IST)

மதுரையில் மாடுகள் மீது ஆசிட் வீச்சு! – மர்ம நபர்களை பிடிக்க கோரிக்கை!

மதுரையில் சாலையில் நின்ற மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சூர்யா நகர் பகுதியில் சாலைபுறம் திரிந்து கொண்டிருந்த மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாடுகள் பல உடல் முழுவதும் காயங்களுடன் சுற்றி வருவது மக்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

வாயில்லா ஜீவன்கள் மீது இப்படியொரு கொடூரத்தை நடத்திய அந்த மர்ம நபர்கள் யார் என்பதை போலீஸார் கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மக்கள், மாடுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விலங்குகள் ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.