மீண்டும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவது எப்போது? – மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில் அடுத்து தடுப்பூசி செலுத்தும் நாள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பல இடங்களிலும் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும். தடுப்பூசிகள் வேகமாக செலுத்தும் கட்டமைப்பு தமிழகத்தில் இருந்தாலும், மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது” என தெரிவித்துள்ளார்.