வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 24 மே 2016 (19:56 IST)

திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி கூறினார் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.


 
 
முதல்வராக நேற்றைய தினம் ஜெயலலிதா பதவியேற்றதையடுத்து, நாளை முதல் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து தனது முகநூலில் அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தன்னை தேர்ந்தெடுத்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
சட்டமன்ற தலைவர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றுவேன். சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற தொடர்ந்து பாடுபடுவேன். மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்