1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 ஆகஸ்ட் 2018 (15:29 IST)

கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன் ; சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் : ஸ்டாலின் அதிரடி

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
சூரியன் இல்லாத வானமாக, சொற்கள் தொலைத்த மொழியாக, மாலுமி இல்லாத கப்பலாக, தாயை இழந்த பிள்ளையாகத் தலைவர் கலைஞரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் கழகத்தின் கோடி உடன்பிறப்புகளில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் இன்னமும் வேதனைக் கடலில் எல்லோரது மனதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
 
மதவெறியை விதைத்து, மாநில உரிமைகளை பறித்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கலமா என நப்பாசை கொண்டிருக்கிறார்கள்.  தலைவரை இழந்த திமுகவில் என்ன நடக்கிறது என்பதில் நம்மை விட அரசியல் எதிரிகளுக்கு அதிக அக்கறை. 
 
நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் துணையோடு!

என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
அழகிரியின் ஆதங்கம், தமிழிசையின் பேட்டி ஆகியவைகளுக்கு ஸ்டாலின் இந்த அறிக்கை மூலம் பதில் கூறியிருப்பதாக பேசப்படுகிறது.