1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 நவம்பர் 2021 (07:19 IST)

18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை!

வங்க கடலில் தோன்றி உள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு இன்னும் 12 மணி நேரத்தில் வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
மேலும் டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே இன்று காலை முதல் சென்னையில் உள்ள பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று முழுவதும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வங்க கடலில் தோன்றி உள்ள காற்றழுத்த தாழ்வு மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இன்று முதல் சனிக்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது