வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (13:23 IST)

தமிழக கரையை நோக்கி நகர்கிறது காற்றழுத்த தாழ்வு: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி!

தமிழக கடற்கரையை நோக்கி காற்றழுத்த தாழ்வு நகர்ந்து வருவதாகவும் அதனால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
காற்றழுத்த தாழ்வு காரணமாக மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்