வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 டிசம்பர் 2024 (10:03 IST)

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

Mumbai Rains
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில், தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரத்தை ஒட்டி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில், தற்போது தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் உள்ளது.

இந்த நிலையில், இன்று அதே பகுதியில் வலுவிழக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் சில வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், டிசம்பர் 30ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் வட கடலோரம், தெற்கு ஆந்திரா கடலோரம், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Edited by Siva