திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:47 IST)

நெடுஞ்சாலையில் ரேஸ் நடத்திய லாரிகள்! – பற்றி எரிந்து இருவர் பலி!

accident
திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் போட்டி போட்டு சென்ற இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரிலிருந்து வள்ளியூருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது அதே சாலையில் தூத்துக்குடி சென்ற மற்றொரு லாரியும் சென்றுள்ளது.

இரண்டு லாரிகளும் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றை ஒன்று முந்தி செல்வதில் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லாரி மற்றொரு லாரியுடன் உரசியதில் இரண்டு லாரிகளுமே நிலை தடுமாறி விபத்தாகியுள்ளன.

இதில் தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி தீப்பிடித்ததில் அதிலிருந்த டிரைவர், க்ளீனர் இருவருமே உடல்கருகி உயிரிழந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடம் விரைந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.