குற்றவாளியுடன் கும்மாளம் போட்ட போலீஸ் சஸ்பெண்ட்
குற்றவாளியுடன் கும்மாளம் போட்ட போலீஸ் சஸ்பெண்ட்
குற்றவாளியுடன்விருந்து சாப்பிட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாசிக் அருகே சமீர் பதான் என்ற குற்றவாளியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளனர்.
நீதி மன்ற நடவடிக்கைகள் முடிந்து. குற்றவாளியை மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர்களை சிறையில் அடைக்காமல் இரவு விருந்திற்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு, மது, அசைவ விருந்து வைத்து கும்மாளம் போட்டுள்ளனர்.
இந்த தகவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதும், இது குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதில், அவர்கள் குற்றவாளிகளுடன் மது விருந்து நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த குற்றத்தில் ஈடுபட்ட புரமோத் ஜாதவ், சாகர் போத்லே, ராகுல் தோங்டே ஆகிய மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.