வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (12:45 IST)

கலங்கரை விளக்கம் - கிண்டி இடையே 11 கி.மீ மேம்பாலம்: நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

bridge
சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை 16 கிலோமீட்டர் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் வரும் நிலையில் ஆங்காங்கே மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கலங்கரை விளக்கம் முதல் இன்று வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த ஒப்பந்தத்திற்காக 45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டம் நிறைவேறினால் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிண்டிக்கு 30 நிமிடத்திற்குள் சென்று விட முடியும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by siva