வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (09:01 IST)

வாகனப்பதிவு, ஓட்டுனர் உரிமத்திற்கான கட்டணங்கள் உயர்வு! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் வாகனப்பதிவு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் வாகனப்பதிவு, ஓட்டுனர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணம் நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது 10 மடங்கு உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கருத்துகளை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் உள்ளது. அவகாசம் முடிந்ததும் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும்.

அதன்படி, தற்காலிக வாகனப் பதிவு மற்றும் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கு முன்னர் தகுதி சான்று பெற கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், இனி தகுதி சான்று கட்டணமாக ரூ.500ம், தகுதி சான்று நகல் பெற ரூ.250ம் வசூலிக்கப்படும்.

அதுபோல தகுதி சான்று பெறாத வாகனங்களை திரும்ப பெற சி.எப்.எக்ஸ் நோட்டீஸ் பெறும்போது செலுத்தும் ரூ.30 தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாகன சோதனை மையங்களுக்கான அனுமதி ரூ.1000ல் இருந்து ரூ.5000 ஆகவும், அனுமதி புதுப்பித்தல் ரூ.500ல் இருந்து ரூ.3000 ஆகவும் உயர்த்தபட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இம்மாதம் இறுதி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.