1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (17:20 IST)

கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

Stalin
புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள், பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள் என்று புத்தக நாளை ஒட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய உலகத்திற்கான திறவுகோல் அறிவின் ஊற்று கல்விக்கான அடித்தளம் சிந்தனைக்கான தூண்டுகோல் மாற்றத்திற்கான கருவி மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள், பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்