செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (09:19 IST)

மழை குறைந்தது! தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பையும் குறைத்த கர்நாடகா! - தண்ணீர் வரத்து நிலவரம்!

கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா அரசு தற்போது மழை குறைந்துள்ளதால் தண்ணீர் திறப்பையும் குறைத்துள்ளது.
 

 

தமிழ்நாட்டிற்கு உரிய காலத்தில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை தராமல் கர்நாடகா இழுத்தடித்து வந்த நிலையில், கனமழை காரணமாக கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வேறு வழியில்லாமல் உபரியை கர்நாடகா அரசு திறந்துவிட்டது. 

 

தற்போது மழை பொழிவு குறைந்துள்ளதால் கர்நாடகா மீண்டும் நீர் திறப்பை குறைத்துள்ளது. கே.எஸ்.ஆர் அணையிலிருந்து நேற்று முன் தினம் வினாடிக்கு 70,850 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்த நிலையில் நேற்று இது 46,843 கன அடியாக குறைந்துள்ளது. கபினி அணையில் இருந்து 29,855 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று 19,963 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

 

மொத்தமாக நேற்று முன் தினம் கர்நாடக அணைகளில் இருந்து 77,162 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று இது 60,290 கன அடியாக குறைந்துள்ளது.

 

Edit by Prasanth.K