கார் விபத்தில் சிக்கிய திண்டுக்கல் லியோனி
கார் விபத்தில் சிக்கிய திண்டுக்கல் லியோனி
பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி கார் விபத்தில் சிக்கிய விவகாரம் தெரிய வந்துள்ளது.
பட்டிமன்றம் மூலம் தமிழக மக்களுக்கு நன்று அறிமுகமானவர் திண்டுக்கல் லியோனி. அவர் திமுகவில் இணைந்து, அந்த கட்சிக்கு ஆதரவாக தொலைக்காட்சிகளிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் பேசி வருகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற போது, அவருக்கு முன்னாள் சென்ற லாரி ஒன்று திடீரெனெ பின்னோக்கி வந்ததால், அவரின் கார் விபத்தில் சிக்கியது. ஆனால், லியோனி காயமின்றி தப்பினார் என்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு முன் பலமுறை அவர் விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லியோனியும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் இந்த முறை அவர் உண்மையிலேயே விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.