வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (11:57 IST)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
 
ஜூலை 1 ந் தேதி முதல் 8ந் தேதி வரை மாநிலம் தழுவிய அளவில் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
 
மேலும் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
 
திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 
 
இந்த போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் (ஜாக்) பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
 
மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.
 
இதனால்  நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. நீதிமன்ற வாயில் முன்பு புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் 3ந்தேதி (புதன்கிழமை) மத்திய அரசு அலுவலக வாயில் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் மற்றும் வருகின்ற 8-ந் தேதி (திங்கட்கிழமை) மத்திய,மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.
 
பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளனர்