Daily Horoscope
✕

பட்டாசு குடோன் வெடி விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு..! முதல்வர் நிவாரண தொகை அறிவிப்பு

Written By Mahendran
Updated: சனி, 29 ஜூலை 2023 (16:52 IST)
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.  
 
கிருஷ்ணகிரி அருகே உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அதன் தீப்பிழம்புகள் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியதால் பட்டாசுகளில் பற்றி பெரும் விபத்து ஏற்பட்டது. 
 
இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டதாகவும் இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து உயிர் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
 
இந்த நிலையில்  பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்  பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண தொகையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments