Daily Horoscope
✕

கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூஸ் கைதா?

Updated: ஞாயிறு, 13 ஜனவரி 2019 (13:23 IST)
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்றும், இந்த வீடியோ வெளியிட்டவர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் கோடநாடு விவகாரத்தில் பத்திரிகையாளர் மேத்யூஸை கைது செய்ய எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படை டெல்லி விரைந்துள்ளதாகவும் எந்த நேரத்திலும் மேத்யூஸ் கைது என்ற செய்தி வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக கோடநாடு கொள்ளை தொடர்பாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் மற்றும் வீடியோவில் பேசியவர் உள்பட ஒருசிலர் மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments