கொரோனா எதிரொலி; கொடைக்கானலில் கட்டுப்பாடு! – திரும்பி செல்லும் பயணிகள்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் திரும்ப செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுற்றுலா தளமான கொடைக்கானலில் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இ-பாஸ் பெறாத வாகனங்கள் திரும்ப அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.