காதலிக்க மறுத்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக் குத்து
தேனி மாவட்டத்தில் 10 வகுப்பு மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை நவீன் குமார் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் மாணவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தோர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மேலும், தலைமறைவான மாணவனை தேடும் முயற்சியில் காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.