Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொன்னே போட்டுடீங்களேய்யா; வயிறு எரிகிறது: கொந்தளிக்கும் நடிகை கஸ்தூரி!

கொன்னே போட்டுடீங்களேய்யா; வயிறு எரிகிறது: கொந்தளிக்கும் நடிகை கஸ்தூரி!

Written By Caston
Updated: சனி, 2 செப்டம்பர் 2017 (18:08 IST)
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திரைத்துறையினர் கொதித்தெழுந்துள்ளனர்.


 
 
அனிதாவின் தற்கொலையை தொடர்ந்து பலரும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என பலரும் கொந்தளிக்கின்றனர். திரைத்துறையை சார்ந்த பலரும் அனிதாவின் மரணம் குறித்து தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

 
இந்நிலையில் சமீப காலமாக டுவிட்டரில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகை கஸ்தூரி அனிதாவின் தற்கொலை குறித்து கொந்தளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், ஏதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா!! வயிறு எரிகிறது என கூறியுள்ளார். மேலும் நீட் அனிதாவை கொன்றுவிட்டது என ஆங்கிலத்தில் ஹேஷ் டேக்கும் போட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் சூப்பர்.. பாராட்டிய முக ஸ்டாலின்!.. நடந்தது என்ன?...

ஆதவ் அர்ஜுனா மட்டுமே பேசினா நாங்க எப்ப பேசுறது?.. பிரேமலதா கோபம்!...

திமுக தோல்விக்கு இதுதான் காரணம்!.. செயற்குழு கூட்டத்தில் பேசிய முக ஸ்டாலின்!..

ஐபோன் வாங்கி தராததால் மலையிலிருந்து குதித்த இளைஞர்!.. தாய் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்!..

திமுகவில் அதிரடி மாற்றம்!.. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments