Daily Horoscope

காசிமேட்டில் மக்கள் அலை... மீன் Rate-ம், கொரோனா Count-ம் உச்சம்!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 22 ஜனவரி 2022 (12:51 IST)
காசிமேடு மீன் சந்தையில் கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

 
தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு கடந்த 6 ஆம் தேதி முதலாய் அமலில் இருக்கிறது. மேலும் கடந்த சில வாரங்களாக வார இறுதியான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 23 (நாளை) அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த வார ஊரடங்கில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளே இந்த ஊரடங்கிலும் பின்பற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார். 
 
இதனால் காசிமேடு மீன்சந்தையில் மீன் வாங்க கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காசிமேட்டில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நேர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதனை மக்களும் வியாபாரிகளும் பின்பற்றவில்லை. கூட்டம் அலை மோதுவதால் மீன்களின் விலையானதும் கணிசமாக உயர்ந்துள்ளது. 

எல்லாம் காட்டு

ஐடி வேலை இனி வேண்டாம்.. உபேர் கார் ஓட்டினால் வாரம் ரூ.46000 வருமானம்.. மாற்றி யோசிக்கும் ஜென் சி

காவிரி படுகை பகுதியில் ஐந்து புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள்.. விவசாயிகள் கடும் எதிர்ப்பு...

வெளியே ஒரு கட்டணம்.. உள்ளே வந்தவுடன் இன்னொரு கட்டணம்.. ஆம்னி பேருந்துகளின் அட்டகாசம்...

விஜய் சேதுபதிக்கு நாங்க துணையா நிப்போம்!.. களத்தில் இறங்கிய அதிமுக...

இதயம், சிறுநீரகத்தில் தையல் ஊசி எப்படி வந்தது? அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஆச்சரியம்..

அடுத்த கட்டுரையில்
Show comments