திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2017 (18:27 IST)

அனிதா தற்கொலை : விடுதலை சிறுத்தையினர் போரட்டம் (வீடியோ)

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு குழப்பத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து மத்திய, மாநில அரசுகள் பதவி விலகிடுமாறு கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.


 

 
கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கரூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் துரை செந்தில் தலைமையில் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் வீர வணக்கங்கள் செலுத்தப்பட்டதோடு, மத்திய, மாநில அரசுகள் பதவி விலகிடுமாறும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் ஜெயராமன், கரூர் மாவட்ட பொருளாளர் சதீஸ் என்கின்ற நிலவன், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் சுரேந்தர், கரூர் மாவட்ட தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், நகர செயலாளர் முரளி, மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் சேகரன், கரூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் இளங்கோவன், தாந்தோன்றி பகுதி செயலாளர் சக்திவேல், கரூர் நகர துணை செயலாளர் ஜவஹர், காமராஜு, முற்போக்கு மாணவர் அணி கழகம் மாவட்ட அமைப்பாளர் தீபக்குமார், கரூர் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் சமத்துவ சந்தானம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்