சிறுமியை வன்கொடுமை செய்த 40 வயது ஆசாமி! – 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
கரூரில் பள்ளி சென்ற சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 2019ம் ஆண்டு பள்ளி சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 3ம் வகுப்பு படிக்கும் மாணவியை 40 வயதான சரவணன் என்ற நபர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் குற்றபாளியான சரவணனுக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.