திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (15:26 IST)

போக்குவரத்தை சரி செய்த கலெக்டர் - வைரல் வீடியோ

கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அவரே டிராபிக்கை சரி செய்த காட்சி வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
தமிழக அளவில், ஆங்காங்கே மாவட்ட வாரியாக, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருவதையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு வருவதால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும், தீபாவளி சமயம் என்பதினால், ஆங்காங்கே திருட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, போலீஸார் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு தீவிர பணியை மேற்கொள்ள கரூர் நகராட்சிக்கு உத்திரவிட்டார்.
 
மேலும், கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் திடீரென்று விசிட் அடித்ததோடு, அங்குள்ள பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். 
 
இந்நிலையில் சனிக்கிழமையென்றால் கரூர் நகரம் கூட்ட நெரிசல் காணப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் போலீஸார் யார் துணையும் இல்லாமல் கொசுக்களை ஒழிக்கும் விதம், நிலவேம்பு கசாயம் கொடுப்பதை ஆய்வு மேற்கொண்டு சுமார் 3 மணி நேரம் அப்பகுதி மக்களுடன் மக்களாக இருந்த நிலையில், காமராஜர் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்து.
 
இவருடைய வருகையால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கூடாது என்பதற்காக, அதே பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். இந்த காட்சி பொதுமக்களிடையேயும், அதிகாரிகளிடையேயும், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
மாவட்ட ஆட்சியர் வருகை என்றால் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்களிடையே இந்த கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், எனக்காக மக்களை யாரும் காக்க வைக்க வேண்டாம் என்று கராராக உத்திரவிட்டது குறிப்பிடத்தக்கது.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்