வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:15 IST)

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: சட்டசபையில் கோரிக்கை!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டுமென திமுக எம்எல்ஏ பரந்தாமன் அவர்கள் சட்டசபையில் வலியுறுத்தியுள்ளார்
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஏற்கனவே எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் எழும்பூர் வரலாற்று பதிவுகளில் உள்ளபடி எழுமூர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் இன்று எம்எல்ஏ பரந்தாமன் வலியுறுத்தினார் 
 
இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்குமா? ரயில்வே துறை ஒப்புக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்