1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 16 மே 2017 (19:14 IST)

லஞ்ச மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது எப்ஐஆர்: திகார் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் தீவிரம்!

லஞ்ச மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது எப்ஐஆர்: திகார் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் தீவிரம்!

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது லஞ்ச மோசடி செய்ததாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வருகின்றன.


 
 
தொழிலதிபர் இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஊடகம் ஒன்றுக்கு அனுமதி கொடுப்பதற்காக கார்த்தி சிதம்பரம் 90 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக அமலாக்கப்பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ இந்த சோதனையை கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் வீடுகளில் நடத்தியுள்ளது.
 
இந்திராணி முகர்ஜியின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் நியூஸ் எக்ஸ், 9X மற்றும் 9X Music ஆகிய சேனல்களை நடத்தி வருகிறது. இந்த ஊடக நிறுவனத்துக்கான முதலீட்டை 4 கோடி என்ற அளவில் குறைத்து காட்டி வெளிநாடு முதலீடு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
 
இதற்கு ப.சிதம்பரம் உதவியதாகவும், அதற்காக 90 லட்சம் ரூபாய் பணத்தை கார்த்தி சிதம்பரம் வாங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது. இதனையடுத்து கார்த்தி சிதம்பரம், இந்திராணி உள்ளிட்ட பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் கார்த்தி சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.